சென்னை: சந்திரயான் 3 லேண்டரை தொடர்புகொண்ட சந்திரயான் 2 ஆர்பிட்டர் அதனை நிலவுக்கு வரவேற்றுள்ளது.
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய கடந்த 2019-ல் இந்தியா சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியது. ஆனால் சந்திரயான் 2-ன் லேண்டர் வேகமாக நிலவின் மேற்பகுதியில் மோதி தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் , திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில்தான் நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில் சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இந்தியா செலுத்தியது.
இதன் லேண்டர் நாளை நிலவில் இறங்க உள்ள நிலையில், நிலவை சுற்றிக் கொண்டிருக்கிற சந்திரயான் 2 ஆர்பிட்டர் சந்திரயான் 3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.முன்னதாக சந்திரயான் 3 லேண்டரை சந்திரயான் 2 ஆர்பிட்டர் நிலவுக்கு வரவேற்றது.
பின்னர் இரண்டும் தங்களுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.