ரஜினிக்கு இந்திய ராணுவம் அளித்த கவுரவம்

நடிகர் ரஜினி இமயமலை ஆன்மிக பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்றார். அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷை சந்தித்து பேசினார். கவர்னர் ஆனந்திபென் படேலையும் சந்தித்தார். பின்னர் அயோத்திக்கு சென்ற அவர் அனுமன்கர்கி கோயிலுக்கு சென்று வழிபட்டார். ராமர் கோயில் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.

இந்தநிலையில் லக்னோ ராணுவ தலைமையத்திற்கு ரஜினியை அழைத்து சென்று ராணுவ அதிகாரிகள் கவுரவித்தனர். இந்திய ராணுவத்தின் முதன்மை கமாண்டிங் அதிகாரி லெப்டினெண்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகளுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.