ரஜினியின் 170வது படத்தில் வில்லனாகும் பஹத் பாசில்?

தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் ரஜினிக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. கடந்தவாரம் நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஜெயிலர் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது ரூ.500 கோடி வசூலை இப்படம் எட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக ‛ஜெய்பீம்' ஞானவேல் இயக்கும் தனது 170 வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி.

இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், சர்வானந்த் உள்ளிட்ட பல நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மலையாள நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் மெயின் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. என்கவுன்ட்டருக்கு எதிரான போலீஸ் வேடத்தில் ரஜினி நடிக்கும் இந்த படத்தில், பஹத் பாசில் அழுத்தமான வில்லன் வேடத்தில் நடிப்பதாகவும், மாமன்னன் படத்தைப் போலவே இந்த படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் வகையில் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.