'இந்தியா நிலவில் நடைபயணம்'…. இஸ்ரோஅசத்தல் அப்டேட்!

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இதனை விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய அந்த நொடியை ஒட்டு மொத்த இந்திய மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதனை தொடர்ந்து 4 மணி நேரம் கழித்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் பிரிந்து நிலவில் தரையிறங்கும் என கூறப்பட்டது. அதன்படி படிப்படியாக விக்ரம் லேண்டர் தரையிறங்கிய போது கிளம்பிய புழுதி அடங்கிய பிறகு சுமார் பிரக்யான் ரோவரை வெளியே கொண்டு வரும் பணிகளை தொடங்கியது இஸ்ரோ.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

விக்ரம் லேண்டரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர தொடங்கிய ரோவர் சுமார் 6 மணி நேரம் கழித்து முழுமையாக நிலவில் தடம் பதித்தது. இதனை இஸ்ரோ இன்று காலை உறுதிப்படுத்தியது. இதுதொடர்பாக இஸ்ரோ பதிவிட்டுள்ள டிவீட்டில் சந்திரயான் – 3 ரோவர்: இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. நிலவுக்காக தயாரிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளது.

மேலும் சந்திரயான் 3 ரோவர் லேண்டரில் இருந்து கீழே இறங்கியது என்றும் இந்தியா நிலவில் நடைபயணம் செய்தது! என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் பல அப்டேட்டுகள் விரைவில் என்றும் இஸ்ரோ இஸ்ரோ தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சந்திரயான் 3 திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றதாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை ஐசிஎஃப்பில் தயாரிக்கப்படும் புஷ் புல் ரயிலில் இத்தனை வசதிகளா? வேற லெவலில் இறங்கிய இந்திய ரயில்வே!

அடுத்தப்படியாக நிலவில் பிரக்யான் ரோவர் எடுக்கும் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் தென் துருவத்தில் இறங்கியுள்ள பிரக்யான் ரோவர் அடுத்த 14 நாட்கள் தனது ஆய்வு பணியை மேற்கொள்ளும். நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்துள்ள நாடு என்ற பெருமையை பெற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.