Redmi A2+ ஸ்மார்ட்போன் ரூ.8500 ல், 128GB ஸ்டோரேஜ் வசதியுடன்! 5000mAh பேட்டரியும் இருக்கு!

Redmi A2+ 64GB வேரியண்ட் மொபைல் 5000mAh பேட்டரி மற்றும் 6.52 இன்ச் டிஸ்பிளே ஆகிய அம்சங்களோடு கடந்த மே மாதம் வெளியானது. இந்நிலையில் அதே மாடலில் புதிய அப்டேட்டுகள் செய்யப்பட்டு தற்போது இந்தியாவில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

​Redmi A2+ டிஸ்பிளே மற்றும் நிறம்Redmi A2+ மொபைலில் 6.52-இன்ச் HD+ water drop டிஸ்பிளே பொறுத்தப்பட்டுள்ளது. தற்போதும் அதுவே தொடர்கிறது. மேலும், சீ க்ரீன் (Sea Green), கிளாசிக் ப்ளாக் (Classic Black) மற்றும் அக்வா ப்ளூ (Aqua Blue) ஆகிய மூன்று நிறங்களில் இந்த மொபைல் கிடைக்கிறது.Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.​
​Redmi A2+ ஸ்டோரேஜ்மே மாதம் வெளியிடப்பட்ட Redmi A2+ மொபைலில் இருந்து ஸ்டோரேஜ் வசதி மட்டுமே இந்த முறை அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் Redmi A2+ அப்டேட் மாடலில் புதிதாக 4GB + 128GB ஸ்டோரேஜ் வசதி இணைத்து வெளியிடப் பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
​Redmi A2+ ப்ராசஸர்Redmi A2 பிளஸ் மாடலில் MediaTek Helio G36 சிப்செட் பொறுத்தப் பட்டிருந்தது. தற்போது அப்டேட் செய்யப்பட்ட மாடலிலும் அதே ப்ராசஸர் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடல் ஆன்ட்ராய்டு 13 அடிப்படையில் இயங்குகிறது.Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.​
​கேமரா மற்றும் பேட்டரிRedmi A2+ 8MP+QVGA மெயின் கேமரா மற்றும் 5 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளது. 5000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
​Redmi A2+ – ன் அப்டேட்டட் விலைதற்போது மீண்டும் அப்டேட் செய்யப்பட்டு வெளியாகியுள்ள Redmi A2+ மொபைலின் 4GB + 128GB வேரியண்ட்டின் விலை 8,499 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல், மே மாதம் வெளியாகிய 4GB + 64GB வேரியண்ட் 7,999 ரூபாய்க்கு அமேசான் தளத்தில் விற்பனை ஆகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.