சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி/பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் அந்தோனி நெல்சன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உதவி பாதுகாப்பு இணைப்பாளர் திரு. செத் நிவின்ஸ் ஆகியோர் புதன்கிழமை (ஓகஸ்ட் 23) யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
வருகை தந்த பிரதிநிதிகளை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்கேஆர் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களால் வரவேற்கப்பட்டார்கள். இந்த சந்திப்பின் போது யாழ். தளபதி மற்றும் பிரதிநிதிகள் யாழ் குடாநாட்டில் சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, சமூக நலத்திட்டங்கள், பாதுகாப்பு அக்கறைகள், அபிவிருத்தி உதவிகள், தேசத்தை கட்டியெழுப்பும் பணிகள் மற்றும் ஏனைய பொது விடயங்கள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
சந்திப்பின் முடிவில் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி/பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் அந்தோனி நெல்சன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் எண்ணங்களை பதிவிட்டதுடன், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கான விஜயத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி அவர்களும் கலந்துகொண்டனர்.