சிங்கப்பூர் அதிபராவாரா தமிழர் தர்மன் சண்முகரத்தினம்? தமிழில் ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள்… உச்சக்கட்ட பிரச்சாரம்!

சிங்கப்பூர் அதிபருக்கான தேர்தல் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி தமிழர், தர்மன் சண்முகரத்தினம், சீன வம்சாவளியை சேர்ந்த இங் கொக் சொங் மற்றும் டான் கின் லியோன் ஆகிய 3 பேரும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் ஆளும் பிஏபி கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் துணை பிரதமராக இருந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராகவும் இருந்துள்ளார்.

சென்னை டூ திருப்பதி: லட்டு மாதிரி கிடைச்ச வந்தே பாரத்… ஹைதராபாத்துக்கு பெத்த ஜாக்பாட்!

மேலும் கல்வி அமைச்சர், நிதி அமைச்சர் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார் தர்மன் சண்முகரத்தினம். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிங்கப்பூரில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள் தமிழில் பேசியே ஓட்டு கேட்கின்றனர்.

53 தாய்மார்களுக்கு தல 1000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள்

சீன வம்சாவளி வேட்பாளர்களும் தமிழர்கள் மத்தியில் தமிழில் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். தர்மன் சண்முகரத்தினத்திற்கு சின்னமாக அன்னாசிப்பழம் வழங்கப்பட்டுள்ள நிலையில் Lau Pa Sat பகுதியில் பிரச்சாரம் செய்த தர்மன், அங்கிருந்த ஜூஸ் கடைக்காரருக்கு அன்னாசிப்பழத்தை வழங்கி வாக்கு கேட்டார்.

‘எனக்கு ஒரு பொண்ணு பார்க்க முடியலையா?’ அம்மாவை கல்லால் அடித்துக்கொன்ற மகன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் மூன்று வேட்பாளர்களுமே உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மன் சண்முகரத்தினம் மற்ற இரண்டு வேட்பாளர்களை விடவும் வயதில் குறைந்தவர். மற்ற இரண்டு வேட்பாளர்களும் 75 வயதில் உள்ளவர்கள். தர்மனுக்கு 66 வயதுதான் ஆகிறது. அதோடு அந்த இரண்டு வேட்பாளர்களை விடவும் அரசியல் அனுபவம் அதிகம் உள்ளவர் தர்மன். அரசு ரீதியாகவும் பணியாற்றியுள்ளார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி பெறுவதற்காக, தர்மன் அனைத்து அரசியல் மற்றும் பொது அலுவலக பதவிகளையும் கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்தார். கவுரவத்திற்காக அதிபராக ஆசைப்படவில்லை என்றும் நீண்டகால நோக்கத்தின் அடிப்படையில் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புவதாகவும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார் தர்மன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.