5G, 6G என உலகமே வேகமாக சென்றுகொண்டிருக்கையில் சமீபத்தில் இந்தியாவிலும் 5G Network அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வரும் அனைத்து மொபைல்களுமே 5G சப்போர்ட் வசதியோடே வெளியாகி வருகின்றது. அப்படி, இந்தியாவில் வெளியாகும் 5G மொபைல்களில் 15,000த்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகி வரும் முன்னணி நிறுவனங்களின் மொபைல் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்.
Redmi 12 5Gசீனாவின் முன்னணி மொபைல் நிறுவனமான ரெட்மியின் மாடலான Redmi 12 5G மொபைல் 50MP டூயல் கேமரா மற்றும் 5000mAh பேட்டரி திறனுடன் விற்பனையாகி வருகிறது. அதன் இதர சிறப்பம்சங்கள் மற்றும் விலை பின்வருமாறு.Qualcomm Snapdragon 4 Gen 2 ப்ராசஸர்.6.79 – இன்ச் FHD+ டிஸ்பிளே மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட்50MP பின்பக்க கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமரா4GB ரேம் + 128GB ரோம், 6GB ரேம் + 128GB ரோம் மற்றும் 8GB ரேம் + 256GB ரோம் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.5000mAh பேட்டரி திறன் மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிஇதன் 4GB ரேம் 128GB ரோம் வேரியண்ட் 12,999 ரூபாய் விலையிலும், விற்பனை ஆகிறது. 6GB ரேம் + 128GB ரோம் மற்றும் 8GB ரேம் + 256GB ரோம் ஆகிய இரு வேரியண்ட்டுகளும் 14,999 ரூபாய் விலையிலும் வெளியிடப்பட்டது.TECNO Pova 5 Pro கடந்த வாரம் வெளியாகியுள்ள TECNO Pova 5 Pro -ல் 50 மெகாபிக்ஸல் டூயல் ரியர் கேமரா, 6000mAh திறன்மிக்க பேட்டரி என உங்கள் காசுக்கு ஏற்ற மதிப்பில் வெளியாகியுள்ளது.
MediaTek Dimensity 6080 ப்ராசஸர்6.78″ FHD+ Dot-in டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்50 மெகாபிக்ஸல் டூயல் ரியர் கேமரா, 16 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா8GB ரேம் + 1286GB ரோம் மற்றும் 8GB ரேம் + 256GB ரோம் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.6000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி8GB ரேம் + 1286GB ரோம் வேரியண்ட் 14,999 ரூபாய் மற்றும் 8GB ரேம் + 256GB வேரியண்ட் 15,999 ரூபாயில் கிடைக்கிறது.Vivo Y2750 மெகாபிக்ஸல் கேமரா, 44W சார்ஜிங் வசதி என 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் சமீபத்தில் வெளியாகியுள்ளது Vivo Y27.
MediaTek Helio G85 ப்ராசஸர்6.64 – இன்ச் IPS LCD FHD+ டிஸ்பிளே மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட்50MP + 2MP பின்பக்க கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமரா6GB ரேம் +128GB ரோம் வேரியண்ட்டில் வெளியாகியுள்ளது.5000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 44W வேகமான சார்ஜிங் வசதிஇதன் 6GB ரேம் +128GB ரோம் வேரியண்ட்டின் விலை 14,999 ரூபாய் ஆகும்.POCO M6 Pro 5Gஸ்னாப்டிராகன் ப்ராசஸர், பெரிய கேமரா, திறன்மிக்க பேட்டரி என இந்த மாதத்தில் தான் வெளியாகியுள்ளது POCO M6 Pro 5G. இதன் விலை மற்றும் இதர சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு.
Qualcomm Snapdragon 4 Gen 2 ப்ராசஸர்.6.79 – இன்ச் FHD+ டிஸ்பிளே மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட்50MP + 2MP பின்பக்க கேமரா மற்றும் 8MP செல்ஃபீ கேமரா4GB ரேம் 64GB ரோம், 6GB ரேம் மற்றும் 128GB ரோம் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கின்றன.5000mAh பேட்டரி திறன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்4GB ரேம் 64GB ரோம் வேரியண்ட் 10,999 ரூபாய்க்கும் , 6GB ரேம் மற்றும் 128GB ரோம் வேரியண்ட் 12,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது.OPPO A58 5Gகண்களை பறிக்கும் கருப்பு நிறத்தில் ஓப்போ நிறுவனத்தின் A78 5G
ஸ்மார்ட்போன்MediaTek Helio G85 ப்ராசஸர்.6.56 இன்ச் HD+ டிஸ்பிளே மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட்50MP + 2MP பின்பக்க கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமரா6GB ரேம் +128GB ரோம் வேரியண்ட்டில் வெளியாகியுள்ளது.5000mAh பேட்டரி திறன் மற்றும் 33W Super VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிஇதன் 6GB ரேம் +128GB ரோம் வேரியண்ட் 14,999 என்ற விலையில் கிடைக்கிறது.