பி.வாசு இயக்கத்தில் லாகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சந்திரமுகி – 2’ படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத் பேசியபோது, “என் வாழ்கையில் நான் எப்போதுமே எங்குமே நடிக்க வாய்ப்பு கேட்டதில்லை. ஆனால் ‘சந்திரமுகி – 2’-வில் கேட்டேன். வாசு சாருக்கு எல்லாமே தெரியும். என் ஹேர்ஸ்டைல் முதல் லிப் கலர் வரை. சந்திரமுகி எப்படி நடப்பாளோ அப்படியே நடந்து காட்டி எனக்குச் சொல்லிக் கொடுத்தார். ராகவா லாரன்ஸ் ரொம்ப சார்மிங். அவருக்கு நான் பெரிய ரசிகை. முதல் நாள் ஷூட் அப்போ மேடம் என்றார், அடுத்த நாள் ‘கங்கனா’ என்றார், அதற்கு அடுத்த நாள் ‘கங்கு’ என்றார். அந்த அளவுக்கு நாங்க நண்பர்கள் ஆகிட்டோம். கீரவாணி சார் ஆஸ்கர் வாங்கும்போது நானே வாங்கின மாதிரி அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது” என்று பேசியுள்ளார்.

இதையடுத்து பேசிய இசையமைப்பாளர் கீரவாணி, “‘சந்திரமுகி 1’ படத்துல என் நண்பன் வித்யாசாகர் ரொம்ப அருமையா மியூசிக் பண்ணிருப்பார். வாசு சார் நல்ல மனிதர்னு தெரியும், ஆனா அவர் நல்லா பாடவும் செய்வார். அடுத்தப் படத்துல என்னோட மியூசிக்ல நீங்க பாடணும் சார். வடிவேல் சார் இல்லனா என்டர்டெயின்மென்ட்டே இல்ல. படத்த 2, 3 வாட்டி மக்கள் உங்களுக்காக மட்டுமே பார்ப்பாங்க சார். ‘சந்திரமுகி 1’ ‘லகலகலக…’, ‘சந்திரமுகி 2’ல ‘லைகாலைகாலைகா…'” என்று உற்சாகத்துடன் பேசினார்.