புதுடில்லி: டில்லி அரசின் மதுபான ஊழல் வழக்கில் விசாரணை விவரங்களை ரூ. 5 கோடி லஞ்சம் பெற்று கசியவிட்டதாக அமலாக்கத்துறை மூத்த அதிகாரிகள் , ஊழியர்கள் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.
புதுடில்லியில் கடந்த 2021 நவம்பரில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கையில் நடந்த ஊழல் காரணமாக அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இதையடுத்து. அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தன.
இதில் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை நடத்திய வரும் விசாரணைகள் அது தொடர்பான உள்ளிட்ட ரகசிய ஆவணங்களை கசிய விட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தியதில் அமலாக்கத்துறையில் அமலாக்கத்துறை மூத்த அதிகாரி பவன் காத்ரி, உதவி இயக்குனர் விக்ரமாதித்யா சிங், மற்றம் சில கீழ்நிலை ஊழியர்கள் கறுப்பு ஆடுகளாக செயல்பட்டதும் இதற்காக ரூ. 5 கோடி வரை லஞ்சம் பெற்று லஞ்ச பணத்தை பகீட்டு கொண்டதும் தெரியவந்தது.
அவர்கள் குறித்த விவரங்களை சி.பி.ஐ., சேகரித்து விரைவில் அவர்கள் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement