
ஹெல்மெட் அவசியம் : புல்லட் ஓட்டி வழிப்புணர்வு ஏற்படுத்திய தன்யா ஹோப்
மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரிக்கும் படம் 'வெப்பன்'. ஏ.குகன் சென்னியப்பன் இயக்குகிறார். சத்யராஜ், வசந்த் ரவி, தன்யா ஹோப் நடித்துள்ளனர். தற்போது படத்தின் புரமோசன் பணிகளை தொடங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 'ஹெல்மெட் பேரணி' ஒன்று நடத்தப்பட்டது. இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்பட்டது.
இதனை வசந்த்ரவி, தன்யா ஹோப் மற்றும் தயாரிப்பாளர் மன்சூர் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பைக் ரைடர்களுடன் அவர்களும் சிறிது தூரம் புல்லட் ஓட்டிச் சென்றனர். “ஹெல்மெட் ஒரு உயிர் காக்கும் கருவி என்பதை மக்கள் உணர வேண்டும். பெரும்பாலான விபத்துகளில் மரணம் அடைவது ஹெல்மெட் அணியாததால்தான். நம் உயிர் விலை மதிக்க முடியாதது. அதை பாதுகாக்க சில ஆயிரங்கள் செலவு செய்வது தவறில்லை என்பதை உணர்த்தவே இந்த பயணம்” என்றார் தான்யா ஹோப்.