நீட் தேர்வு.. "இதுதான் உங்க ரகசியமா".. பிரச்சாரத்திலேயே நீ சொல்லிருக்கணும்.. கொதித்து பேசிய இபிஎஸ்

சென்னை:
நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை அமைச்சர்

அண்மையில் கூறிய நிலையில், அதை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர்

. “உங்களிடம் நேர்மை இருந்திருந்தால் இந்த ரகசியத்தை பிரச்சாரத்தின் போதே நீங்கள் கூறியிருக்க வேண்டும்” என்றும் அவர் சாடியுள்ளார்.

சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த காரணத்தால் மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான்.

ஏற்கனவே நீட் தேர்வால் அடிக்கடி தற்கொலை நடந்து வரும் நிலையில், இந்த தற்கொலை சம்பவம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என திமுக கூறியிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என மக்கள் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

மேலும், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு தெரியும் என பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதையும் சமூக வலைதளங்களில் மக்கள் பகிர்ந்தனர். இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு நீட் எதிர்ப்பு உண்ணாவிரதத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், “நான் தான் சொன்னேன் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இருக்குனு. இப்போ சொல்றேன் அந்த ரகசியத்தை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். அப்போது தமிழகத்திற்கு நீட் விலக்கு கிடைக்கும். இதுதான் ரகசியம்” என்றார்.

உதயநிதியின் இந்த பேச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தலுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பேசினார். உதயநிதி ஸ்டாலின் ஒரு படி மேலே போய், திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்த நீட் தேர்வு தான் என பிரச்சாரம் செய்தார். அதுமட்டுமல்ல, நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியமும் தனக்கு தெரியும்னு சொன்னாரு. இன்னைக்கு அதே உதயநிதி உப்பு சப்பு இல்லாத ஒரு விஷயத்தை சொல்லி இதுதான் ரகசியம்னு சொல்றாரு.

உங்களுக்கு தைரியமும், நேர்மையும் இருந்திருந்தால் இதுதான் ரகசியம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லி இருக்க வேண்டியுதானே. அதை விட்டுவிட்டு, மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்தது விட்டு இப்போது வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்றாங்க. இதுதான் விடியா திமுக அரசின் லட்சணம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.