அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்திருக்கும் ‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாகத் தொடங்கியது.
பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக் கான் மாஸ் என்ட்ரி கொடுக்க அரங்கமே ஆரவாரமாகியிருக்கிறது. படத்திற்கு மாஸாக இசையமைத்திருக்கும் அனிரூத்திற்கு உச்சிமுகர்ந்து முத்தம் கொடுத்து அரங்கை அதிரவைத்தார் ஹாருக் கான். மேலும், யோகி பாபுவை கட்டித்தழுவிய பாராட்டினார்.
பிரமாண்டங்கள் நிறைந்த இந்நிகழ்சியை மிர்ச்சி விஜய், பாவனா இணைந்து தொகுத்து வழங்குகின்றனர்.

அட்லி கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று தனது முதல் படமாக ‘ஜவான்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமும் ஜவான்தான். பாலிவுட்டில் ‘டேவிட்’ படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்தாலும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு முழுப்படத்துக்குமாக பாலிவுட் அறிமுகம் இதுதான். இப்படி பல ஸ்பெஷலான விஷயங்கள் இப்படத்தில் இருக்கின்றன. இதனால் ரசிகர்களிடையே இப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
தற்போது பிரமாண்டமாகத் தொடங்கிய இவ்விழாவில் பேசிய கலை இயக்குநர் முத்துராஜ் “அட்லி `இங்க இருந்து ஒரு படையே போகுது’னு சொன்னாரு. அப்போ அட்லி எனக்கு பெரிய மனுஷனா தெரிஞ்சாரு. தமிழ் இன்டஸ்ரியிலிருந்து 3000 பேர் என ஒரு பெரிய பட்டாளமே இப்படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள்” எனக் கூறியிருக்கிறார்.
இதையடுத்துப் பேசிய பாடலாசிரியர் விவேக், “இங்கு நான் நல்ல மெசேஜை கூறிய ஒரு தமிழ் நடிகர் குறித்து பேசப்போகிறேன். அந்த தமிழ் நடிகர் பெயர் ‘ஷாருக்கான்’. அந்த தமிழ் திரைப்படம் ‘ஹே ராம் ‘! . ‘நாயகன் மீண்டும் வரார் ‘ பாட்டோட ஹிட்டுக்கு பிறகு அனிருத்தால ‘ஹுக்கும் ‘ பாட்டு பண்ண முடியுது. அடுத்து லியோ… ” என்று பேசினார்.
விழாவில் ஹாருக் கான், விஜய் சேதுபதி, அட்லி, நயன்தாரா என பலர் இந்த மேடையில் உரையாற்ற காத்திருக்கின்றனர்.