சென்னை: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்திற்கு முதல் வாரம் சிறப்பான ஓபனிங் கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் முதல் நான்கு நாட்களும் 100 கோடிகளுக்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில், வார இறுதிக்குப் பின்னர் ஜவான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஆட்டம் கண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
