வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அதற்கு காரணமாக உள்ள ஒவ்வொருவரையும் பாராட்ட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக போலீசாருக்கு விருந்து அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டில்லியில் கடந்த 9 மற்றும் 10 தேதிகளில் ஜி20 மாநாடு நடந்தது. இந்தியா தலைமையேற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடா, பிரேசில் அதிபர் லுலா ட சில்வா, சீன பிரதமர் லி கெகியாங், நெதர்லாந்து பிரதமர் உள்ளிட்ட ஜி20 அமைப்பின் இடம்பெற்றுள்ள நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்காக டில்லியில் கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில், டில்லியில் இரவு, பகல் பாராமல் பாதுகாப்பில் ஈடுபட்ட ஈடுபட்ட டில்லி போலீசாரின் பணியை அங்கீகரிக்கும் வகையில், இந்த வாரத்தில் ஒரு நாள் அவர்களுக்கு விருந்து அளிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக டில்லியில் அனைத்து போலீஸ் ஸ்டேசன்களிலும், ஜி20 மாநாட்டிற்காக சிறப்பாக பணியாற்றிய போலீஸ் ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரை பட்டியல் தயாரிக்கும்படி, டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பட்டியலில் 450 பேர் வரை இடம்பெறுவார்கள் எனவும், விருந்து நிகழ்ச்சி ஜி20 மாநாடு நடந்த பாரத் மண்டபத்தில் நடக்கும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய நிகழ்வுகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை நேரில் பிரதமர் மோடி பாராட்டுவது இது முதல்முறையல்ல. கடந்த மே மாதம், புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுவதில் முக்கிய பங்காற்றிய ஊழியர்களை மோடி நேரில் பாராட்டியிருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement