வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோபைடன் மீது கண்டன தீர்மானம் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை அந்நாட்டு பார்லி. சபாநாயகர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மகன் ஹன்டர் பைடன். இவர் வெளிநாடுகளில் வர்த்தக பரிவர்த்தனைகள் தொடர்பாக அரசுக்கு தவறான தகவல் தருவதாகவும், ஊழல் செய்துள்ளதாக , எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
இதையடுத்து குடியரசு கட்சி எம்.பி.க்கள், ஜோ பைடனுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என சபாநாயகர் கெவின் மெகார்தேவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதையடுத்து அதிபர் ஜோபைடன் மீது கண்டன தீர்மானம் கொண்டு வந்து விசாரிக்குமாறு பார்லி., குழுவுக்கு உத்தரவிடுவதற்கான நடவடிக்கையை கெவின் மெகார்தே எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement