Apple Event 2023: ஐபோன் 15 சீரிஸ் போன்களின் விலை; ஆப்பிள் வாட்ச்; விலை குறைக்கப்பட்ட மாடல்கள்!

ஆப்பிளின் புதிய 15 சீரிஸ் ஐபோன்களான 15, 15 ப்ளஸ், 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் போன்கள் நேற்று இரவு நடைபெற்ற ஆப்பிளின் ஈவென்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

எதிர்பார்த்தப்படியே ‘A17’ பயோனிக் சிப், ‘USB Type C’, ஆக்‌ஷன் பட்டன், டைட்டானியம் பில்ட் உள்ளிட்டவை புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரையும் ஒரு சில மாற்றங்கள் வந்துள்ளன. என்னனென்ன சிறப்பம்சங்கள் புதிதாக வந்துள்ளன, விலை எவ்வளவு என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

ஐபோன் 15 மற்றும் 15 ப்ளஸ்

இதில், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸில் பயன்படுத்தும் அதே ‘A16′ பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. அதனால், அதே பேட்டரி மற்றும் சூடாகும் பிரச்னை இருக்க வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், செயல்திறனில் குறை இருக்காது. கேமராவைப் பொறுத்தவரை 48MP மெயின் கேமரா, 2X வரை டெலி போட்டோ எடுக்கலாம். 60 FPS-ல் 4K HDR வீடியோ எடுக்கலாம். போட்டோ எடுத்தப்பின் போக்கஸை எந்த சப்ஜக்ட்டுக்கும் மாற்றிக் கொள்ளலாம். ஐபோன் 15; 6.1’ இன்ச் மற்றும் 15 ப்ளஸ்; 6.7 இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. 2000 nits கொண்ட ‘Super Retina XDR டிஸ்பிளே.

ஐபோன் 15 மற்றும் 15 ப்ளஸ்

இந்த போன் கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு என ஐந்து நிறங்களில் வருகிறது.

விலை:

ஐபோன் 15

128GB: ₹79,900

– 256GB: ₹89,900

– 512GB: ₹1,09,900

ஐபோன் 15 ப்ளஸ்

– 128GB: ₹89,900

– 256GB: ₹99,900

– 512GB: ₹1,19,900

ஐபோன் 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ்

ஹைஎண்ட் மாடல்களான ஐ-போன் 15 ப்ரோ மற்றும 15 ப்ரோ மேக்ஸ் இரண்டிலும் ஆப்பிளின் புதிய ‘A17′ பயோனிக்’ சிப் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய ‘A16’ சிப்பைவிட பல மடங்கு செயல்திறன் கொண்ட சிப்பாக இது இருக்கும் என ஆப்பிள் கூறுகிறது. 48MP மெயின் கேமரா, 12 MP வைடு கேமரா மற்றும் 12MP, 5X வரை 120 mm ஆப்டிக்கல் ஜூம் கொண்ட டெலி போட்டோ கேமரா பொருத்தப்பட்டிருக்கிரது. 4K/60p ProRes பார்மேட்டில் வீடியோ எடுக்கலாம். ஆட்டோமேட்டிக் கலர் கரக்‌ஷன் செய்ய ‘ACES’ சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பைவிட சென்சார் 25 சதவிகிதம் பெரிதாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. டிஸ்ப்ளேவைப் பொறுத்தவரை 6.1 மற்றும் 6.7 இன்ச் அளவிலான ‘ProMotion’ 120Hz டிஸ்பிளேக்கள் கொடுக்கப்படவுள்ளது.

ஐபோன் 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ்

வெளிபுற டிசைன் பொறுத்தவரை முன்பிருந்த அலுமினியத்திற்குப் பதிலாக டைட்டானித்தால் செய்யப்பட்டுள்ளது. இது அலுமினியத்தைவிட கொஞ்சம் எடை குறைவாக இருக்கும். போனைக் கையில் பிடிப்பதற்கு ஏதுவாக விளிம்புப் பகுதியிலும் லேசான கர்வ் டிசைன் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்பார்த்தபடி மியூட் பட்டனுக்குப் பதிலாக ‘ஆக்‌ஷன் பட்டன்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான எந்தவொரு வசதியையும் அதில் அமைத்துக் கொள்ளலாம். இது போனைப் பயன்படுத்துவதற்கு நல்லவொரு அனுபவத்தை நிச்சயம் தரும். கருப்பு டைட்டானியம், வெள்ளை டைட்டானியம், நீல டைட்டானியம் மற்றும் இயற்கை டைட்டானியம் என நான்கு கலர்களில் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விலை:

ஐபோன் 15 ப்ரோ

– 128GB: ₹1,34,900

– 256GB: ₹1,44,900

– 512GB: ₹1,64,900

– 1TB: ₹1,84,900

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்

– 256GB: ₹1,59,900

– 512GB: ₹1,79,900

– 1TB: ₹1,99,900

இதன் விற்பனை செப்டம்பர் 22ம் தேதியும், முன்பதிவு (வெள்ளிக்கிழமை) செப்டம்பர் 15ம் தேதியும் ஆரம்பமாகிறது. அதேசமயம், ஐபோன் SE -429 டாலராகவும் (சுமார் ரூ.35533), ஐபோன் 13 – 599 டாலராகவும் (சுமார் ரூ.49613), ஐபோன் 14 – 699 டாலராகவும் (சுமார் ரூ.57896) குறைக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர நேற்றைய ஆப்பிள் ஈவண்டில் புதிய S9 சிப், புதிய டிஸ்பிளே கொண்ட புதிய ஆப்பிள் வாட்ச் மற்றும் 9 சீரிஸ் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா -2 அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு கைவிரல்களை ஒன்று சேர்த்து சின் முத்திரைப் போல் வைத்தாலே டேப் ஆகும் புதிய அம்சமும் சார்ப்ரைஸாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த விலையில் ஐபோனின் புதிய 15 சீரிஸ் வாங்குவதா? விலைகுறையும் ஐபோனின் பழைய மாடல்களை வாங்குவது சிறந்ததா? இல்லை இந்த விலைக்கு ஆண்ராய்டில் எது வாங்குவது சிறந்ததாக இருக்கும் என்பதை கமென்ட்டில் பதிவிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.