புதுடில்லிஒன்பது தொலைக்காட்சிகளின், 14 செய்தி தொகுப்பாளர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சிகளை புறக்கணிக்க, ‘இண்டியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா வெளியிட்ட அறிக்கை:
நாட்டிலுள்ள வகுப்புவாத பிரச்னைகளையும், அது தொடர்பான விவாதங்களையும் ஊக்குவிக்கும் கூட்டணியாக இருக்க, ‘இண்டியா’ கூட்டணி விரும்பவில்லை. ஆனால், சில தொலைக்காட்சிகள் வகுப்புவாத பிரிவினைகளை அதிகரிக்க செய்யும் விதமாக விவாதங்களை நடத்துகின்றன.
சில செய்தி தொகுப்பாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் திட்டமிட்டே நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், ஒன்பது தொலைக்காட்சிகளை சேர்ந்த, 14 செய்தி தொகுப்பாளர்கள் பங்கேற்கும் விவாதங்களில் இண்டியா கூட்டணி கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த தொலைக்காட்சிகள் பட்டியலில், ‘நியூஸ் 18, பாரத் எக்ஸ்பிரஸ், டிடி நியூஸ், ஆஜ் தக், பாரத் 24, இண்டியா டுடே, இந்தியா டிவி, டைம்ஸ் நவ் நவ்பாரத், ரிபப்ளிக் பாரத்’ உள்ளிட்ட தொலைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
‘இண்டியா’ கூட்டணியின் அறிவிப்புக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இண்டியா கூட்டணியின்
தொகுதி பங்கீடு பேச்சு!இண்டியா கூட்டணியினரின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, முந்தைய லோக்சபா அல்லது சட்டசபை தேர்தல் முடிவுகளை கணக்கில் வைத்து, அந்த மாநிலத்தின் வலுவான கட்சியை முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சில் சிக்கல் ஏற்பட்டால், குறிப்பிட்ட மாநிலத்தில் ஆட்சி பங்கு இல்லாத கட்சியின் பிரதிநிதி பிரச்னையை தீர்க்க பாலமாக செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்