மாஹே நிபா வைரஸ் பரவலையொட்டி புதுச்சேரி அரசு மாஹே பகுதியில் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. நிபா வைரஸ் பரவல் கேரளா மாநிலத்தில் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவின் எல்லைப் பகுதியான புதுச்சேரி மாநிலத்தின் மாஹே பகுதியில் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதையொட்டி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், எனவும் இதை காவல்துறை உறுதி […]