இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்று பிறந்தநாள். இதனால் காலையிலிருந்தே பல்வேறு திரைப்பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவனின் மனைவியும் நடிகையுமான நயன்தாரா அவரது கணவருக்கு ரொம்பவே உருக்கமாக ஒரு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்.
விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நயன்தாரா கூறியிருப்பதாவது, ‘என்னுடைய ஆசீர்வாதத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த சிறப்பான நாளில் நான் உங்களைப் பற்றி எழுதியே ஆக வேண்டும். ஆனால், நான் எழுதத் தொடங்கினால் சில விஷயங்களை குறிப்பிட்டுக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளமாட்டேன் என நினைக்கிறேன். நீங்கள் என் மீது பொழியும் அளவுகடந்த அன்பிற்கும் நம் உறவின் மீது வைத்திருக்கும் மரியாதைக்கும் நான் நிறையவே நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

உங்களைப் போன்று வேறொருவர் இருக்கவே முடியாது. என்னுடை வாழ்வில் நுழைந்து அதை அழகுமிக்க கனவுலகமாகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியதற்கு நன்றி.
நீங்கள் செய்யும் அத்தனை காரியங்களிலும் நீங்கள்தான் சிறப்பானவர்களாக இருக்கிறீர்கள். என்னுடைய உயிரான உங்களுக்கு வாழ்வில் சிறப்பானவை எல்லாம் கிடைக்க வேண்டும் என ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்கிறேன். உங்களின் அத்தனை கனவுகளும் நிஜமாகட்டும். சந்தோஷங்களில் மூழ்கித் திளைக்க கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். ஐ லவ் யூ!’ என நயன்தாரா தன் கணவரான விக்னேஷ் சிவனுக்கு எமோஷனலாக வாழ்த்து கூறியிருக்கிறார்.

நயன்தாராவின் இன்ஸ்டா பக்கத்தில் இந்தப் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இதயங்களை பறக்கவிட்டிருக்கின்றனர்.