சென்னை: நடிகர் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், ராதிகா, பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது துருவ நட்சத்திரம் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு, சில பிரச்சினைகள் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டில் மீண்டும் துவங்கப்பட்டு, தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
