சென்னை: தமிழ்நாட்டில், தென்மேற்குப் பருவமழை விலகுவதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பெய்வது நடைமுறை. ஆனால், இந்த ஆண்டு காற்றின் திசை மாறுபாடு காரணமாக தென்மேற்கு பருவமழை காலத்திலும் ஓரளவுக்கு மழை பெய்தது. இந்த காலக்கட்டத்தில், பல்வேறு வட மாநிலங்களில் பெய்த கனமழை கடும் சேதத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், தென் மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை விலகுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், அக்டோபர் முதல் டிசம்பர் […]
