Smartphone Earning: மாதம் நீங்கள் பெரும் வருமானம் உங்களுக்கு போதுமானதாக இல்லை என்றால், அடுத்த ஆண்டு பதவி உயர்வுக்காகவும், ஊதிய உயர்வுக்காகவும் காத்திருக்க விரும்பவில்லை என்றால், இப்போது உங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்ள சில வழிகள் இருக்கின்றன. இந்த வழியின் மூலம் நீங்கள் நிலையான வருமானத்தை பெருவீர்கள்.
சம்பாதிப்பதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஆனால் சில மணிநேரங்கள் வேலை செய்வதன் மூலம் உங்கள் மாதாந்திர வருமானத்தை அதிகரிக்கும் ஒரு நல்ல தொகையை நீங்கள் பெற வாய்ப்புள்ளது. உங்களுக்கு தேவையானது பழைய ஸ்மார்ட்போன் மற்றும் இணைய இணைப்பு மட்டுமே தான்.
ஆன்லைன் ஆஃப் டெஸ்டிங்
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ஆஃப்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், உருவாக்கப்படும் அந்த ஆப்பில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, முதல் சில மாதங்களுக்கு அதனை சிலரால் சோதனைக்கு உள்ளாக்கப்படும். அவர்கள் அந்த செயலியை சோதிக்க வேண்டும். இதுபோன்ற ஆப்களை சோதனை செய்தால், தினமும் ரூ.500-1000 வரை சம்பாதிக்கலாம். ஆன்லைனில் பல இணையதளங்கள் உள்ளன, அவை சோதனை செயலிகளுக்கு பணம் செலுத்துகின்றன, அவற்றைப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் நல்ல இணைய இணைப்பு மூலம் சம்பாதிக்கலாம்.
கேம் டெஸ்டிங்
மொபைல் கேமிங் மோகம் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இப்போது மக்கள் கேமிங்கிலும் பணம் சம்பாதிக்கிறார்கள். சில கேம் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் புதிய கேம்களை சோதிக்க பணம் செலுத்துகின்றன. அது லட்சங்களிலும் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்த வழியிலும் சம்பாதிக்கலாம்.
அஃபிலியேட் மார்க்கெட்டிங்
அஃபிலியேட் மார்க்கெட்டிங் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவானது. இதன் மூலம் பணம் சம்பாதிக்க, ஈ-காமர்ஸ் இணையதளத்தில் உங்களின் ஆன்லைன் அஃபிலியேட் சுயவிவரத்தை (Profile) உருவாக்கி, அதன்பின் அந்த நிறுவனத்தின் தயாரிப்பு இணைப்பை சமூக ஊடகங்களில் பகிர வேண்டும், அதன் பிறகு அந்த இணைப்பில் இருந்து யாராவது வாங்கும்போதெல்லாம், அந்த பொருளின் விலையைப் பெறுவீர்கள்.
ஆன்லைன் கணக்கெடுப்பு
தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் கருத்துக்கணிப்புகள் அதிகமாகிவிட்டன என்பது மட்டுமில்லாமல் பொதுவாகிவிட்டன. இப்போது நீங்கள் அத்தகைய ஆய்வுகளில் இருந்தும் சம்பாதிக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இதற்காக, சில சர்வே இணையதளங்களும் உள்ளன. அவற்றை பார்வையிடுவதன் மூலம் தேவையான கணக்கெடுப்பை முடித்துக் கொடுத்த பின்னர், ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை சம்பாதிக்கலாம்.
வாசகர்கள் கவனத்திற்கு…
ஆன்லைன் மூலம் வேலை அளித்து வருமானம் அளிக்கும் இதுபோன்ற சில வேலைகளும் உள்ளன. இருப்பினும், அவற்றை தேர்வு செய்வது உங்கள் பணியாகும். இதுபோன்ற பல மோசடிக்காரர்களும் இருப்பார்கள் என்பதால் சற்று கவனமாகவே செயல்பட வேண்டும்.