இரு மொய்தி இன மாணவர்கள் கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்| Two Moithi students killed: Manipur again tense

இம்பால்: மணிப்பூரில் மொய்தி இனத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

மணிப்பூரில் கடந்த மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்கள் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 175 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து இரு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்து சென் வீடியோ நாட்டை அதிரவைத்தது.

இந்நிலையில் நேற்று சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. புகைபடங்கள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் புகைபடங்களில் பிணமாக கிடந்த இருவரும் மொய்தி இனத்தைச் சேர்ந்த 17,19 வயது மாணவர்கள் எனவும் கடந்த ஜூலை மாதம் இவர்கள் காணாமல் போனவர்கள் என தெரியவந்தது.

ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணை கைதியாக பிடித்து வைத்திருப்பது போன்றும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் புகைபடங்கள் வெளியாகி மணிப்பூரை மீண்டும் அலற வைத்துள்ளது.
கொலையான மாணவர்களின் சடலங்கள் எங்கு கிடக்கிறது என இடம் தெரியாமல் போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து “விரைவான நடவடிக்கை எடுத்து உடல்களை கண்டறியுமாறு காவல்துறைக்கு மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.