உஜ்ஜைன், மத்திய பிரதேசத்தில், சாலையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு நடந்த பரிசோதனையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துவக்கி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் நகரின் சாலையில் கடந்த 25ம் தேதி, 12 வயதுள்ள சிறுமி ஒருவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். போலீசார், சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
இதற்கிடையே, அந்த சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால், இந்துார் அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
முன்னதாக அச்சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர், இருப்பிடம் குறித்து எந்த தகவலையும் உறுதியாக தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
எனினும், அந்தச் சிறுமி உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து விசாரிக்க எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement