கைதுக்கு முன்பாகவே, ‘வீடியோ’ பதிவு செய்து வைத்து, அதை கைதுக்கு பின் சஞ்சய் சிங் வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
எந்த ஆதாரமும் இன்றி அமலாக்கத் துறையினர் என்னைக் கைது செய்துள்ளனர். அதானியின் மோசடிகளை அம்பலப்படுத்தியும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழல்கள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்புவேன். அரவிந்த் கெஜ்ரிவாலின் வழி வந்த நாங்கள் ஒருபோதும் தலைவணங்கி, பின்வாங்க மாட்டோம். அட்டூழியங்கள் செய்து, மக்களை சிறையில் அடைத்து ஒருபோதும் பா.ஜ.,வால் வெல்ல முடியாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
‘வீடியோ’ வெளியிட்ட சஞ்சய் சிங்!
சஞ்சய் சிங் கைது குறித்து புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்த கைது முழுக்க முழுக்க சட்டவிரோதமானது. 2024 லோக்சபா தேர்தலில் தோல்வியை எதிர்பார்த்து காத்திருக்கும் பா.ஜ.,வின் கடைசி அவநம்பிக்கையான முயற்சி இது.
ஆயிரக்கணக்கான சோதனைகள் நடத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு இருந்தாலும், பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தேர்தல் வரும் வரை இன்னும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவர். இது பிரதமர் மோடியின் பதற்றத்தை காண்பிக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவ் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளதன் வாயிலாக உண்மை வெற்றி பெற்றுள்ளது. மணீஷ் சிசோடியா, விஜய் நாயர், சஞ்சய் சிங் ஆகியோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், இந்த பட்டியல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரை நீளும். எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், குற்றம் செய்தவர்கள் நிச்சயம் ஒரு நாள் தண்டிக்கப்படுவர்.
இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் விலக வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
கைது பட்டியல் நீளும்!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement