புத்தசாலி மனிதர் பிரதமர் மோடி: ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்| Smart man PM Modi: Praise of Russian President Putin

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாஸ்கோ: புத்திசாலி மனிதர் பிரதமர் மோடி என ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் புகழ்ந்து பேசியுள்ளார்.

ரஷ்யாவிலிருந்து வெளிவரும் ஆர்.டி. என்ற செய்தி தளம் வெளியிட்டுள்ள வீடியோவில் ரஷ்ய அதிபர் விளாடி மிர்புடின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியது,

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பெரும் வளர்ச்சி பெற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது. நிதி பாதுகாப்பு, சைபர் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான ஒத்துழைப்பின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

பிரதமர் மோடி ஒரு புத்திசாலி மனிதர். குறிப்பாக உக்ரைனில் நடந்து வரும் மோதலில் ரஷ்யா மீது பழி சுமத்தாமல், அமைதியை நிலைநாட்ட அழைப்பு விடுத்தார். இந்தியாவுடன் ரஷ்யா அரசியல் ரீதியாக நல்ல நட்புறவு வைத்துள்ளது. ஜி 20 மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்தியது ஒரு மைல்கல். இதனை ரஷ்யா வரவேற்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பதில் பிரதமர் மோடி சரியானதைச் செய்கிறார். இவ்வாறு புடின் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.