கேங்டாக்: வடக்கு சிக்கிமில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ முகாமை கடுமையாக தாக்கியுள்ளது. இந்நிலையில், 23 ராணுவ வீரர்கள் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
Source Link