சென்னை தமிழக அரசு குறுவை பயிரிட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்கும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கர்நாடக அரசு காவிரியில் இருந்து போதிய அளவு தண்ணீர் திறந்துவிடாததால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள இந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கடந்த ஜூன் 12-ந்தேதி டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக முதல்வர் […]
