வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மதுபான கொள்கை மோசடி வழக்கில் கைதாகியுள்ள ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்கை 5 நாள் கோர்ட் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
புதுடில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். கடந்த, 2021 – 2022–ம் நிதியாண்டில், புதுடில்லி மதுபான கொள்கை விவகாரத்தில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தப்பட்டது எனவும். இதன் வாயிலாக பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில், இதில் நடந்துள்ள மோசடியை சி.பி.ஐ., விசாரிக்கிறது. இதில் நடந்துள்ள பண பரிமாற்ற மோசடியை அமலாக்கத் துறை விசாரிக்கிறது.
இந்த மோசடியில் இடைத்தரகராக செயல்பட்ட, தினேஷ் அரோரா என்ற தொழிலதிபர், ஆம் ஆத்மி எம்.பி.,யான சஞ்சய் சிங்கிற்கு ரூ. 3 கோடி லஞ்சம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து சஞ்சய் சிங்கின் வீடு உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்தி எம்.பி., சஞ்சய் சிங்கை, அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று மாலையில் கைது செய்தனர்.இன்று (05 ம் தேதி) டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்ப்டடார். அவரை 5 நாள் கோர்ட் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement