வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அடுத்த மாதம் சந்திக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக கருதப்படும் அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அடுத்த மாதம் சான் பிரான்சிஸ்கோ நடக்க உள்ள மாநாட்டில் இரு தலைவர்களும் பேச திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சீன அதிபரை சந்திக்க பைடன் ஆவலுடன் இருப்பதாகவும், ஆனால் இன்னும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.
வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு கூறியிருப்பதாவது: சீனாவும் அமெரிக்காவும் ஒரே திசையில் செயல்பட வேண்டும். இரு நாட்டு தலைவர்களையும் உரையாடலை நடத்தி உறவு முறையை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement