அயோத்தி ராமர் கோவில் கட்டுமான செலவு ரூ.900 கோடி: வங்கி இருப்பு ரூ.3,000 கோடி:அறக்கட்டளை| Ayodhya Ram Temple Construction Cost Rs 900 Crore: Bank Balance Rs 3,000 Crore: Foundation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லக்னோ: ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ.900 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வங்கி இருப்பு ரூ.3 ஆயிரம் கோடியாக உள்ளது என ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை செயலாளர் சம்பத்ராய் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: “கோயில் கட்டும் பணிக்காக 2020 பிப்ரவரி 5 முதல் 2023 மார்ச் 31 வரை ரூ.900 கோடி செலவிடப்பட்டுள்ளது. இன்னும் ரூ.3,000 கோடிக்கு மேல் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் உள்ளது”கும்பாபிஷேகம் விழா ஜனவரி 22, 2024-ல் நடைபெற உள்ளது, விழாவில் பிரதமர் மோடி மற்றும் நாடு முழுவதிலும் இருந்து 10,000க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

2024 -ல் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போதிலும் 2025 ம் ஆண்டு ஜனவரிக்குள் மூன்று கட்டங்களாக கோவில் கட்டி முடிக்கப்படும்.

சரயு நதிக்கரையில் அமைந்துள்ள ராம் கதா அருங்காட்சியகம் சட்டப்பூர்வ அறக்கட்டளையாகவும், 500 ஆண்டுகால ராமர் கோயில் வரலாறும், 50 ஆண்டுகால சட்ட ஆவணங்களும் அங்கு வைக்கப்படும் .

கும்பாபிஷேக விழாவிற்கு முன், ராமர் முன் அரிசி வழிபாடு செய்யப்படும், பின்னர் அது இந்தியா முழுவதும் விநியோகிக்கப்படும். ஜனவரி 1 முதல் 15 வரை ஐந்து லட்சம் கிராமங்களில் அரிசி (‘பூஜித் அக்ஷத்’) விநியோகிக்கப்படும். ஒரு குழு கும்பாபிஷேக விழாவுக்காக உருவாக்கப்பட்டது,” என்று அவர் விரிவாகக் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.