சிவாஜி நகர் : பெங்களூரு சிவாஜிநகர் தர்மராஜா கோவில் தெருவில், ஏகாம்பரீஸ்வரர் தர்மராஜா கோவில் உள்ளது. இக்கோவிலில் சீனிவாச பெருமாள் சன்னதி உள்ளது.
ஆண்டுதோறும் நடக்கும் சீனிவாச பெருமாள் – லட்சுமி தாயாருக்கு நடக்கும், திருக்கல்யாணம் சிறப்பு வாய்ந்தது.
கோவில் அருகே உள்ள, காமாட்சி கல்யாண மண்டபத்தில் இன்று காலை 9:00 மணியில் இருந்து மதியம் 12:00 மணி வரை, சீனிவாச பெருமாள் – லட்சுமி தாயாரின் 15 வது ஆண்டு, திருக்கல்யாணம் நடக்கிறது.
இந்த திருக்கல்யாணத்தில் பக்தர்கள் கலந்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். திருக்கல்யாண வைபவம் முடிந்த பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், ஸ்ரீகாஞ்சி வணிக வைசிய சமூக நிர்வாகிகள் செய்துஉள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement