இந்தியா அதன் ஆராய்ச்சி அறிவுக்கு உலகமெங்கும் பெயர் போனது. இதை கௌரவிக்க Careers360 இன் ஆசிரிய ஆராய்ச்சி விருதுகளின் இரண்டாவது நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது.
அக்டோபர் 6ஆம் தேதி தீன் மூர்த்தி ஹவுஸ், பிரதம மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இவ்விருது நிகழ்ச்சியில் இந்தியாவின் 81 தலைசிறந்த ஆராய்ச்சி அறிஞர்கள் அவர்களின் வெளியீடு, மேற்கோள் எண்ணிக்கை மற்றும் H -இன்டெக்ஸ் ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டனர். பொது நிறுவனங்களைச் சேர்ந்த 30 ஆராய்ச்சியாளர்களும், தனியார் நிறுவனங்களிலிருந்து 27 பேரும் சிறந்த ஆசிரியர் விருதுகளை பெற்றனர்.மேலும், பாராட்டுக்குரிய ஆசிரியர் விருதை 24 அறிஞர்கள் பெற்றனர். கூடுதலாக, இந்தியாவின் தலைசிறந்த ஆயிரம் ஆராய்ச்சியாளர்களுடைய பெயர்கள் மற்றும் நிறுவனத்தின் பெயர்கள் ‘white paper’ இல் வெளியிடப்பட்டது. இவர்களுடைய பங்களிப்பு உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாண்புமிகு மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான் விருதுகளை வழங்கினார். மேலும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தலைவர் பேராசிரியர் டாக்டர் டிஜி சீத்தாராம் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய ஸ்ரீ தேவுசிங் சவுகான், “முழு உலகிலும், மனித வளர்ச்சி அறிவின் அடிப்படை, எச்-இன்டெக்ஸ் 0.5 ஆக இருந்தது. இன்று அது 0.85. இதுவே உங்கள் சாதனை. இங்குள்ள சில ஆராய்ச்சியாளர்கள் 25,000 மேற்கோள்களைக் கொண்டுள்ளனர். இந்தியாவில் எவ்வளவு வேலை நடக்கிறது என்று இதில் தெரிகிறது. பிரதமர் ஆராய்ச்சிக்கு ஊக்குவித்ததுடன் சினெர்ஜியிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50,000 கோடி ரூபாய் ஆராய்ச்சிக்காக முதலீடு செய்ய தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைக்கப்படுகிறது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் இது சாத்தியமானது. எங்கள் துறையும் இந்தத் திசையில் செயல்படுகிறது. நமது டிஜிட்டல் உள்கட்டமைப்பில் ஏற்பட்ட புரட்சிக்கு டெலிகாம் தான் அடிப்படை. பின்னர், மற்ற நாடுகள் தங்கள் நிலவு பயணங்களில் நிறைய முதலீடு செய்தன, ஆனால் நாம் அதை மிகக் குறைந்த தொகையில் செய்தோம். இந்த வெற்றிக்கான பெருமை விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் உரியது. ஆதித்யாவும் இதேபோன்ற வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறினார்.

ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் டிஜி சீத்தாராம், “careers 360ல் இருந்து பல ஆராய்ச்சியாளர்கள் விருதுகளைப் பெறுவதைக் கண்டு, ஒரு ஆராய்ச்சியாளராக இங்கு இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் முதுகெலும்பு. ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா ஒரு நம்பிக்கைக்குரிய இடம். 2014-ல், நாம் ஐபோன்களை இறக்குமதி செய்தோம் அனால் இப்போது உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறோம். இன்று, வெளியீடுகள் மற்றும் காப்புரிமைகள், ஸ்டார்ட்-அப்களில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் நாம் இருக்கிறோம். உலக சந்தைகளில் கவனம் செலுத்தும் உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு நம்மிடம் இன்று உள்ளது” என்றார்.
தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்துப் பேசியவர், “இது ஒரு முக்கிய ஆவணம். இது மாணவர் மையக் கொள்கையை கொண்டுவருகிறது. NEP இன் மூன்று ஆண்டுகள் கல்விக்கு உத்வேகத்தையும், உயர்கல்வித் துறைக்கு ஊக்கத்தையும் அளிக்கிறது” என்றார்.
இதையடுத்துப் பேசிய ‘Careers360’ இன் தலைவர் மற்றும் நிறுவனர், மகேஷ் பெரி, “இன்று பல விருதுகள் இருந்தாலும், ஒரு நிறுவனத்தை உருவாக்கும் ஆசிரிய உறுப்பினர்களை அங்கீகரிக்க குறைவாகவே உள்ளன. இந்தியாவின் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் சிறந்த ஆசிரிய ஆராய்ச்சியாளர்களை அங்கீகரித்து கொண்டாடுவதற்கு Careers360 உள்ளது. இதுவே எங்கள் தீவிர முயற்சியாகும். இதன் மூலம், இந்தியாவின் எண்ணற்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஆராய்ச்சி முயற்சிகளை உண்டாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அதே போல், அமிட்டி கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் அதுல் சவுகான், “‘Careers360’ ஆசிரிய ஆராய்ச்சி விருதுகள் நாட்டில் கல்வி ஆராய்ச்சியில் சிறந்தவர்களை கொண்டாடுகிறது. எண்ணற்ற மாணவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். இது எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து செய்யப்படும். ஆராய்ச்சியில் அதிக மதிப்பைக் கொண்ட ஒரு நிறுவனமாக, அதை எப்போதும் ஆதரித்து ஊக்குவிக்கும் ஒரு நிறுவனமாக, அமிட்டி பல்கலைக்கழகம் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறது” என்று கூறினார்.