
அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஜி.பி.முத்து : வைரலாகும் போஸ்டர்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வரிசையாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஜி.பி.முத்து. அந்த வகையில் அவர் தற்போது ஆர்வன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதில் ஜி.பி. முத்து பெண் கெட்டப்பில் நடித்துள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜி.பி. முத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் வைரலாகி வருகிறது. மேலும் ஆர்வன் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் ஜி.பி.முத்து நடித்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது.