வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: முன்னாள் தேர்தல் ஆணையரும் காங்., தலைவர்களில் ஒருவருமான எம்.எஸ்.கில் (86) உடல்நல குறைவால் காலமானார்.
இவர் 1958 ஆம் ஆண்டு ஐஏஸ் பேட்சை சேர்ந்தவர்.முன்னாள் தேர்தல் ஆணையராக டி.என் சேஷன் இருந்தபோது அவருடன் பணிபுரிந்தவர்கள் ஜிவிஜி கிருஷ்ணமூர்த்தி. மற்றொருவர் எம்.எஸ்.கில். என்றழைக்கப்படும் ஸ்ரீ மனோகர் சிங் கில். அப்போதுதான் தேர்தல் குழு பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாறியது என்று முன்னாள் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர் 1996-ம் ஆண்டு முதல் 2001 ம் ஆண்டு வரையில்11-வது தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி உள்ளார்.
இவர் தலைமையில் 1998-ல் 12 பார்லி தேர்தல் மற்றும் 1999-ல் 13 -வது பார்லி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடத்தி முடிக்கப்பட்டன. இது மட்டுமல்லாது 11-வது ஜனாதிபதி தேர்தல் மற்றும் 1997-ல் துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டுள்ளன.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து ராஜ்யசபா உறுப்பினரானார். தொடர்ந்து 2008 ம் ஆண்டில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரானார்.
இவரின் சேவைகளை பாராட்டி மத்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
கில் மறைவுக்கு தேர்தல்ஆணையம் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே,பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மறைந்த கில்லுக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர் கில்லின் இறுதி சடங்கு நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement