வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரியாத்: சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை, சந்திக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் சில மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாகவும், மறுநாள் வரை சந்திக்க காத்திருக்க வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், அந்நாட்டிற்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன், இஸ்ரேல், பாலஸ்தீனம் சென்றார்.
மேலும், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு நட்பு நாட்டு தலைவர்களை கண்டனம் தெரிவிக்க வைக்கவும், தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வைப்பது குறித்துமே அவரது பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இதற்காக கடந்த சனிக்கிழமை ஆண்டனி பிளின்கன் சவுதி அரேபியாவின் ரியாத் வந்தடைந்தார். அன்று மாலையே அவர் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திப்பதாக இருந்தது. ஆனால், சந்திப்புக்காக ஆண்டனி பிளின்கன் காக்க வைக்கப்பட்டதாகவும், பிறகு மறுநாள் காலை தான் இரு தலைவர்களின் சந்திப்பு நிகழ்ந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இந்த சந்திப்பின் போது, பல அப்பாவிகளின் உயிர் பறி போனதால் , இஸ்ரேல் ராணுவ தாக்குதலை நிறுத்த வேண்டும் என முகமது பின் சல்மான் வலியுறுத்தியதாக தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement