ஆச்சார்யா ஸ்ரீசம்பூர்ண வித்யாலயம் பள்ளியில் தினமலர் -பட்டம் இதழ் வினாடி வினா போட்டி| Acharya Srisampoorna Vidyalayam School Thinamalar – Degree Magazine Quiz Competition

புதுச்சேரி : புதுச்சேரி ‘தினமலர் – பட்டம்’ இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து ‘பதில் சொல் ; அமெரிக்கா செல்’என்ற மெகா வினாடி வினா போட்டி வில்லியனுார் ஆச்சார்யா ஸ்ரீசம்பூர்ண வித்யாலயம் பள்ளியில் நேற்று நடந்தது.

போட்டியில் 500 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். போட்டி துவக்க நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் காயத்திரி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் முத்துகோவிந்தகுமாரி, முரளி, வெங்கடேஸ்வரி, கோட்டீஸ்வரி, கனகவள்ளி ஆகியோர் பங்கேற்றனர். மாணவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடந்தது.

போட்டியில் 10ம் வகுப்பு மாணவர்கள் கதிர், ரோஷன்சக்தி அணி முதலிடம், 10ம் வகுப்பு மாணவர் பிரதிப், 9ம் வகுப்பு மாணவர் சரவணகுமார் அணி இரண்டாம் இடம் பெற்றனர். இவர்களுக்கு பள்ளி முதல்வர் காயத்திரி சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இறுதிபோட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’வுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.