வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பார்லிமென்டில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக, திரிணமுல் காங்., – எம்.பி., மஹுவா மொய்த்ரா மீது பா.ஜ.,வை சேர்ந்த எம்.பி.,யான நிஷிகாந்த் துபே அளித்துள்ள புகாரை, ஒழுங்கு நடவடிக்கை குழு அக்.,26ல் விசாரிக்கிறது.
பார்லிமென்டில் கேள்வி எழுப்ப, திரிணமுல் காங்., – எம்.பி.,யான மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியுள்ளதாக, பா.ஜ.,வை சேர்ந்த நிஷிகாந்த் துபே புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்தக் கடிதத்தில், ‘லோக்சபாவில் மஹுவா மொய்த்ரா இதுவரை கேட்டுள்ள, 61 கேள்விகளில், 50 கேள்விகள், அதானி குழுமம் தொடர்பானவை.
இந்த கேள்விகளை எழுப்ப, மற்றொரு நிறுவனத்திடம் இருந்து அவர் லஞ்சம் வாங்கியுள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் உள்ளன’ என, குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை, பா.ஜ.,வை சேர்ந்த வினோக் குமார் சோன்கர் தலைமையிலான, லோக்சபா ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஆய்வுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பினார்.
இந்நிலையில், புகாரை, ஒழுங்கு நடவடிக்கை குழு அக்.,26ல் விசாரிக்கிறது. விசாரணையில் லஞ்சம் பெற்றது யாரிடம் என்பது குறித்து தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement