லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில், செவன் ஸ்கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இப்படம், வெளியாவதற்கு முன்பே சிறப்புக் காட்சி தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. இந்நிலையில் தமிழக அரசு ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாக சில அறிவுரைகளை வழங்கித் தெளிவுபடுத்தி இருக்கிறது. அதன்படி ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என மொத்தம் 6 நாள்களுக்கு அதாவது, 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மட்டுமே அனுமதி. அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும். காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்பட வேண்டும் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.

காலை 7 மணி அல்லது 8 மணிக்குச் சிறப்புக் காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் விடுமுறை நாள்களிலும் 9 மணிக்குத்தான் முதல் காட்சி என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விஜய்யின் ‘லியோ’ படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாதது குறித்து தி.மு.க அரசு மீது கடுமையான விமர்சனங்களை ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்து வருகிறார். பலரும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்காததற்கு தி.மு.க அரசுதான் காரணம் என சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.
Thalabathy @actorvijay Anna’s #Leo @Dir_Lokesh excellent filmmaking , @anirudhofficial music , @anbariv master @7screenstudio #LCU ! All the best team !
— Udhay (@Udhaystalin) October 17, 2023
இந்நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லியோ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். தளபதி விஜய் அண்ணாவின் லியோ, லோகேஷ் கனகராஜின் இயக்கம் ,அனிருத்தின் இசை, அன்பறிவு, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என அனைவரையும் குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார். மேலும் LCU என்ற ஹாஸ்டேக்கையும் பதிவிட்டிருக்கிறார்.