உலக கோப்பையில் இந்தியா – வங்கதேசம் அணிகள் புனேவில் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி உலக கோப்பை புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், 2 புள்ளிகளுடன் வங்கதேசம் அணி 6வது இடத்திலும் இருக்கின்றன. இப்போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறும். நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியா – வங்கதேசம் இதுவரை
October 19, 2023
வங்கதேசம் மற்றும் இந்திய அணி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 40 போட்டிகளில் மோதியிருக்கின்றன. அதில் 31 போட்டிகளில் இந்திய அணியும், 8 முறை வங்கதேச அணியும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒருமுறை போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு அணிகளும் மோதிய போட்டிகளின் முடிவுகளை பார்க்கும்போது வங்கதேசம் அணியே அதிக வெற்றிகளை பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
உலக கோப்பையில் இந்தியா தோல்வி
October 19, 2023
உலக கோப்பையில் இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. அதில் 3 போட்டிகளில் இந்திய அணியும், ஒருமுறை வங்கதேச அணியும் வென்றிருக்கின்றன. 2007 ஆம் ஆண்டு தான் உலக கோப்பையில் வங்கதேசம் அணி இந்திய அணியை வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் இருந்தார். சச்சின், சேவாக், யுவ்ராஜ் சிங் என பெரிய பட்டாளமே இருந்தும், அதிர்ச்சி தோல்வியை தழுவி உலக கோப்பை தொடரில் இருந்தே வெளியேறியது. அப்போது கேப்டனாக இருந்த டிராவிட் தான்இப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். அந்த கணக்கை இன்றைய போட்டியில் முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோப்பையில் இதுவரை
நடப்பு உலக கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணிகளான இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும், தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் தோல்வியை தழுவியிருக்கின்றன. இந்த இரு வெற்றிகளும் உலக கோப்பையை மிகவும் சுவாரஸ்யமாக்கியிருக்கின்றன. அதனால் இந்திய அணி வங்கதே அணியை சாதாரணமாக எண்ணி களமிறங்க கூடாது என விமர்சகர்கள்பலுரம் அறிவுறுத்தியிருக்கின்றனர்.