வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகம் செய்வது குறித்து பரிசீலனை செய்யவில்லை என ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. சமீபத்தில் ரூ.2000 நோட்டுகளை மட்டும் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2000 ரூபாய் நோட்டை டெபாசிட் செய்ய செப்டம்பர் 30ம் வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இதனால் ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு, ரூ.1000 நோட்டுகள் அச்சிடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகம் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்யவில்லை. இதனை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement