ஸ்ரீஹரிகோட்டா: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தொடர்பான விண்கல பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. கடலில் விழுந்த ககன்யான் மாதிரி விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கடலில் இறக்கப்பட்ட கேப்சூல், இந்திய கப்பற்படையால் மீட்கப்பட்டது. இஸ்ரோவின் மனிதனை விண்வெளிக்கும் அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டம் 2025ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகள், தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகிறது. அதற்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் மிக முக்கிய நிலையாக […]
