டெல்லி: கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேர்ந்தால், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறை தொடர்ந்த வருகிறது. இதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதை தடுக்க நவீன முறைகளை கையாள வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நடைமுறைக்கு கடந்த 2013ம் ஆண்டே தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் மனித கழிவுகளை மனிதனே […]
