புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி இன்று (அக்.,23) காலமானார். அவருக்கு வயது 77.
இவர் இந்திய அணிக்காக 1967 முதல் 1979ம் ஆண்டு வரையில் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் எரப்பள்ளி பிரசன்னா, பி.எஸ் சந்திரசேகர், எஸ் வெங்கடராகவன், பிஷன் சிங் பேடி அடங்கிய நால்வரின் சுழல் கூட்டணி உலக அளவில் பேசப்பட்டது.
பிஷன் சிங், இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். 67 டெஸ்ட் போட்டிகளில் 266 விக்கெட்களும், 370 முதல்தர போட்டிகளில் 1,560 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement