எமனாக வந்த தெருநாய்கள்: கீழே விழுந்து தொழிலதிபர் பலி| Stray dogs that came in Eman: Businessman died after falling down

அகமதாபாத்: பிரபல தொழிலதிபருமான பராக் தேசாய், தெருநாய்கள் துரத்தி கடித்து குதறியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

குஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பராக் தேசாய்,50, வாக் பக்ரி டீ குழுமத்தின் நிர்வாக இயக்குனரான இவர் கடந்த 15-ம் தேதி வழக்கம் போல் வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

வீடு அருகே வந்த போது அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள் இவரை சூழ்ந்து கொண்டு கடித்து குதறின. நாய்களிடமிருந்து தப்பித்து ஓட முயன்ற போது கீழே விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

9 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பராக் தேசாய்கு விதிஷா என்ற மனைவியும், பரிஷா என்ற மகளும் உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.