சென்னை: கட்ட பஞ்சாயத்து செய்வது எங்க வேலை இல்லை என நடிகை கவுதமிக்கு தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் இராம. சீனிவாசன் பதில் தெரிவித்து உள்ளார். பாஜக நிர்வாகியான பில்டர் அழகப்பன் தனது சொத்தை ஏமாற்றி பறித்துக்கொண்டதாகவும், அவர்மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இந்த பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, கவுதமி ஏற்கனவே கொடுத்த நிலஅபகரிப்பு மற்றும் மிரட்டல் புகாரின் பேரில், பில்டர் […]
