வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாடிகன்: இஸ்ரேல் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் , போப் பிரான்சிஸ் தொலைபேசி வாயிலாக உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே கடந்த 7-ம் தேதி தாக்குதல் நீடித்து வருகிறது. இதில், இஸ்ரேல் தரப்பில் 1,400 பேரும், பாலஸ்தீனியர்கள் 4,469 பேரும் உயிரிழந்துள்ளனர்.போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் வாடிகனின் கத்தோலிக்க திருச்சபையின் போப் பிரான்சிஸ், அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் தொலைபேசியில் உரையாடினார். அவர் கூறியது, உலகில் பல்வேறு மோதல்கள் மற்றும் அமைதிக்கான பாதைகளை அடையாளம் காண வேண்டியதன் அவசியம். இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement