25 வருடத்திற்கு மாதம் ரூ.5.5 லட்சம்; சவுதி அரேபியாவின் லாட்டரி பரிசை வென்ற தமிழர்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘FAST 5 DRAW’ லாட்டரி மிகவும் பிரபலமானது. இந்த லாட்டரி ட்ரா ஒவ்வொரு மாதமும் பல முறை நடைபெறும். அவற்றில் வெற்றி பெற்றால் மாதம் 25,000 ரூபாய் 25 வருடத்திற்கு வெற்றியாளருக்குக் கொடுக்கப்படும். இவை அடிக்கடி நடப்பது அங்கு வழக்கமான ஒன்று. ஆனால், ’25 வருடத்திற்கு மாதம் ரூ.5.5 லட்சம்’ வெற்றிபெறும் லாட்டரி ட்ரா நடப்பது அரிதான ஒன்று. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ‘லைஃப் டைம் செண்டில்மண்ட்தான்’.

இதில் பெரும்பாலும் இதுவரை வெற்றி பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இந்த முறை தமிழ்நாட்டைச் சேர்ந்த மகேஷ் குமார் நடராஜன் என்பவர் இந்த லாட்டரி பரிசை வென்றுள்ளார். இதை வென்ற முதல் இந்தியரும், தமிழரும் இவர்தான்.

மகேஷ் குமார் நடராஜன்

49 வயதாகும் மகேஷ் குமார் நடராஜன் தமிழ்நாடு ஆம்பூரைச் சேர்ந்தவர். இவர் 2019 – 2023 வரையிலான நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பணிக்காகச் சென்றுள்ளார். அங்கு நடைபெறும் லாட்டரி போட்டியில் ஆர்வம் கொண்டு பலமுறை லாட்டரி ட்ராவை வாங்கிப் பரிசுக்காக முயற்சி செய்வதையே வழக்கமாக வைத்து வந்துள்ளார். அவ்வகையில் அண்மையில் நடைபெற்ற இந்த ‘FAST5 Grand Prize of Emirates Draw’ போட்டியில் அதிர்ஷ்டவசமாக வென்று அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5.5 லட்சம் பரிசாகப் பெறப்போகிறார்.

மாத மாதம் வரும் இந்தப் பெரும் தொகையை செலவழிப்பது பற்றிக் கூறும் மகேஷ் குமார் நடராஜன், “என் வாழ்வில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான தருணம் இது. இந்தப் பணத்தை நான் என் மகள்களின் படிப்பிற்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் பயன்படுத்தவுள்ளேன். எனது வாழ்க்கையிலும், நான் படிக்கும்போதும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளேன். எனது கல்விக்காகப் பலர் உதவி செய்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தச் சமுதாயத்திற்குத் திருப்பிக் கொடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த பல உதவிகளைச் செய்யவிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

லாட்டரி குலுக்கல்

அதே சமயம், லாட்டரி தொடர்பான இத்தகைய சம்பவங்கள் உழைக்காமல் சாதிக்க நினைப்பவர்களை அதிகப்படுத்தும் என்றும், கிடைக்கும் சொற்ப பணத்தையும் லாட்டரியில் முதலீடு செய்ய மக்கள் விரும்பும் ஆபத்துள்ளது என்றும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.