Cheap Flight Tickets: தீபாவளி பண்டிகையையொட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பல மாதங்களுக்கு முன்பே ரயில் மற்றும் பேருந்து டிக்கெட்டுகளை மட்டுமின்றி விமான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யத் தொடங்குகின்றனர்.
ஆனால், பிஸியான கால அட்டவணையின் காரணமாகவும், கடைசி நேர திட்டமிடல் காரணமாகவும் பலரும் பண்டிகையை ஒட்டிய தினங்களில் ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயல்வார்கள். ரயில், பேருந்து, விமானம் என அனைத்திலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருக்கும். கிடைக்கும் டிக்கெட்டுகளின் விலை அதிகமாகவும் சாதரண டிக்கெட்டை விட இரு மடங்கு அல்லது மும்மடங்கு அதிகமாகவே இருக்கும்.
இப்படிப்பட்ட சூழலில், பலரும் கடுமையாக முயன்றும் பல நேரங்களில் தங்களின் சொந்த ஊருக்குச் செல்லாமல் பணிபுரியும் ஊரிலேயே இருந்துவிடுவார்கள். குறிப்பாக, பேச்சிலர் இளைஞர்கள் மற்றும் வெளியூரில் தங்கி பயிலும் கல்லூரி மாணவர்கள். இது உங்களுக்கு நடக்க கூடாது என்றால் இது உங்களுக்கான பதிவுதான். இந்த தீபாவளிக்கு மிகவும் மலிவு விலையில் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளைப் பெறக்கூடிய இணையதளங்கள் குறித்து இங்கு நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
இதன்மூலம், நீங்கள் இப்போது கூட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறைந்த விலையில் உங்கள் சொந்த ஊருக்கு செல்லலாம். உங்கள் சொந்த ஊரில் விமான நிலையம் இல்லாவிட்டாலும், அருகில் இருக்கும் மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களுக்கு நீங்கள் டிக்கெட் எடுக்கலாம்.
உதராணத்திற்கு நீங்கள் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் போன்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றால் மதுரைக்கும், திருச்சியை சுற்றியுள்ள மாவட்டக்காரர்கள் திருச்சி விமான நிலையத்திற்கும், கோவையை சுற்றியுள்ள ஊர்காரர்கள் கோவை விமான நிலையத்திற்கும், தென்மாவட்டக்காரர்கள் தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கும் டிக்கெட் எடுக்கலாம்.
மலிவான விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய, நீங்கள் முதலில் SkyScanner என்ற இணையதளத்தை பார்வையிடவும். நீங்கள் இந்த இணையதளத்திற்கு சென்றவுடன், முதலில் நீங்கள் செல்லக்கூடிய இடத்தை தேர்வு செய்யவும். மேலும், அதற்கு அடுத்தே நீங்கள் புறப்படும் இடம் குறித்த தகவல் கேட்கப்படும்.
இந்த இரண்டு தகவல்களையும் நீங்கள் அளித்த பின், உங்களின் புறப்படும் தேதி மற்றும் திரும்பும் தேதியைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் வழங்கப்படும். அடுத்து, நீங்கள் தனியாகப் பயணம் செய்கிறீர்களா அல்லது உங்களுடன் வேறு யாராவது வருகிறார்களா என்ற தகவலையும் அதில் நீங்கள் தெரிவிக்க வேண்டும். இந்தத் தகவலைத் தெரிவித்த உடன், மலிவான விமானங்களின் பட்டியல் உங்கள் முன் காட்டப்படும். அதில் நீங்கள் உங்களுக்குப் பிடித்த விமானத்தைத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இது ஒரு சக்திவாய்ந்த மற்றும் முறையான இணையதளம், இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் மற்ற இடங்களில் கிடைப்பது விட மிகக் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த இணையதளத்தில் எந்தவிதமான மோசடியும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனவே உங்களுக்குப் பிடித்த விமானத்தைத் தேர்வுசெய்து முன்பதிவை பயணத்தை அனுபவிக்கலாம். இந்த இணையதளம் குறித்து பலருக்கும் தெரியாது. எனவே இப்போது நீங்கள் விலையுயர்ந்த விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டியதில்லை, இதனை உங்களின் நண்பர்களுக்கும், குடும்பத்தினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.